நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்: பெரியபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு புதுக்குடியிருப்பில் உள்ள காந்தாரி அம்மன், இருளாயி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
மூலவர்கள் செல்வ விநாயகர், கண்ணா தர்ம முனீஸ்வரர், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, இருளாயி அம்மன், காந்தாரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மாலையில் விளக்கு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.