நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள குச்சிலிய மடத்து மகா முனிஸ்வரர் கோயில் வளாகத்தில் மகா நாக ஈஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு நேற்று வருடாபிஷேக விழா யாகவேள்விகள் நடந்தது. பூஜிக்கப்பட்ட கும்பநீரால் மூலவர் நாக ஈஸ்வரர், ராகு, கேது மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

