நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை நாடார் கடை தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. முன்னதாக மூலவர் பத்ரகாளி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
பெண்கள் பொங்கலிட்டனர். கோயிலில் முன்பு யாகவேள்வி வளர்க்கப்பட்டது. புனித நீரால் அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

