/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் வெடிபொருட்கள்: மேலும் ஒருவர் கைது

ADDED : ஜன 30, 2025 02:33 AM

தொண்டி,:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியில் கடலில் வெடி வைத்து மீன்பிடிப்பதற்காக வீடுகளில் ஜெலட்டின், டெட்டனேட்டர் பதுக்கி வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. 2024 டிச.,21ல் தொண்டி போலீசார் சென்று வீடுகளில் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு வீட்டில் சாக்கு மூடையில் 130 ஜெலட்டின், 200 டெட்டனேட்டர், ஆறு மீட்டர் பீஸ் ஒயர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்தையும் கைபற்றிய போலீசார் பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்தனர்.
இதில் மீனவர்களுக்கு ஜெலட்டின் சப்ளை செய்து தலைமறைவாக இருந்த தொண்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அப்பாஸ் 42, என்பவரை இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் நேற்று கைது செய்தார்.