/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி
/
கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி
ADDED : பிப் 10, 2024 04:44 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொழிலாளர் துறை சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலையில் கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர். பிரசார வாகனத்தில் புத்தகக்கண்காட்சியில் கொத்தடிமை தொழிலாளர் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.
கடைகள், வணிக நிறுவனங்களில் கொத்தடிமை விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கினர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் தொழிலாளர் அமலாக்க பிரிவு உதவி ஆணையர் மலர்விழி செய்திருந்தார்.
தொண்டி
தொண்டி மரைன் போலீசார் கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழியை கடலில் பாதுகாப்பின் போது எடுத்தனர். மரைன் எஸ்.ஐ., செல்வராஜ் தலைமை வகித்தார்.
சமுதாயத்தில் கொத்தடிமை முறை எந்த தொழிலில் இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்போம். கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்விற்காக பணியாற்றுவோம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மரைன் நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.