/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
லஞ்சம், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
லஞ்சம், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 31, 2025 11:49 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், லஞ்சம், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் சிறப்பு நிகழ்ச்சி அரண்மனை பகுதியில் நடந்தது.
டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் முன்னிலை வகித்தார். செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடை பயணம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி முதல் அரண்மனை வரை நடந்தது.
மாணவர்கள் பல்வேறு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி ஊழல் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
அரண்மனை சந்திப்பில் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு பாடல்கள், நகைச்சுவை நாடகங்கள் நடத்தி மக்களுக்கு நேர்மை மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், ராமநாதபுரம் மாவட்ட பகுதி நேர நாட்டுப்புற கலைபயிற்சி மையம் ஒருங்கிணைப்பாளர் லோகசுப்பிரமணியன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

