ADDED : ஆக 13, 2026 12:41 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில்போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி நிர்வாகம், முதல்வரின் போதையில்லா விழிப்புணர்வு நிர்வாகம், மாவட்ட போதை ஒழிப்பு காவல் துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் டி.எஸ்.பி., சுகுமார் போதைப்பொருட்கள் தடுப்பது எப்படி, என்ற தலைப்பில் விரிவாக பேசினார்.
போதையில்லாத தமிழகம் உறுதிமொழியை மாணவர்கள் உட்பட அனைவரும் எடுத்தனர்.கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா நன்றி தெரிவித்தனர்.
கடல்வாழ் உயிரினத்துறை தலைவர் செரபியா வரவேற்றார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்தனர்.
* ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நேற்று போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமையாசிரியர் அழகுலிங்கம் தலைமை வகித்தார் ராமேஸ்வரம் போலீஸ் டி.எஸ்.பி., திருப்பதி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
மாணவர்கள் கோயில் மேலவாசல், திட்டக்குடி வழியாக ஊர்வலமாக சென்று போதைபொருள் விழிப்புணர்வு கோஷம் எழுப்பினர்.
இதில் செஞ்சிலுவை சங்க கவுன்சிலர் தினகரன், நுகர்வோர் மாணவர் மன்றம் ஆசிரியர் பழனிச்சாமி, சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் ஜேம்ஸ் ஆனந்தன், குழந்தைகள் நல பாதுகாப்பு அலு வலர் பூமிநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திக்ராஜா, ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பால முரளி செய்திருந்தார்.
