/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மினி பஸ் இயக்க ஆக.14க்குள் விண்ணப்பிக்கலாம்
/
மினி பஸ் இயக்க ஆக.14க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 29, 2025 11:04 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் பஸ் வசதி குறைவான வழித்தடத்தில் மினி பஸ் இயக்க ஆக.,14க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள குக்கிராமங்களுக்கு பஸ் சேவை வழங்கும் நோக்கில் போக்குவரத்து துறை சமீபத்தில் மினி பஸ் இயக்குவதற்கான புதிய விரிவான திட்டத்தை வெளியிட்டது. ராமநாதபுரத்தில் தேவிபட்டினம், கமுதி, கீழக்கரை, பார்த்திபனுார், கடலாடி, வலங்காபுரி கடற்கரை, குருவாடி, முதுகுளத்துார், தொண்டி, சாயல்குடி, அபிராமம், ஆர்.எஸ். மங்கலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பஸ் வசதி குறைவாக உள்ள 19 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
ஏற்கனவே மினி பஸ் இயக்க அனுமதி பெற்றுள்ள வாகன உரிமையாளர்கள் வழித்தடத்தை நீட்டித்து இயக்க அனுமதிக்கப்படும். புதிதாக மினி பஸ் இயக்க விரும்புவோர், தேவையான ஆவணங்களுடன் மதுரை--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, பட்டிணம்காத்தானில் உள்ள ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆக.,14 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப் பட்டுள்ளது.