UPDATED : ஜூன் 28, 2026 06:44 PM
ADDED : ஜூன் 28, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பயிலரங்கு, பாராட்டு விழா நடந்தது.
டாக்டர் வான் தமிழ் இளம்பரிதி தலைமை வகித்தார். மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், பத்திரிக்கையாளர் புருஷோத்தமன் மற்றும் அமோனியா விஷவாய்வில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கவிஞர்கள் முத்து நிலவன், கலையரசன், பேராசிரியர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினர். சிறுகதை எழுத்தாளர்கள், கவிதை படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பொருளாளர் ரேணுகாதேவி நன்றி கூறினார்.--
