ADDED : செப் 22, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ராமநாதபுரம் மாவட்டம்தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணாதுரை மற்றும் ஈ.வே.ரா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ராமநாதபுரம் முகமது தஸ்தகீர் கல்லுாரியில் நடந்தது.
இதில் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் இசக்கிராஜா இரண்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவர் இசக்கிராஜாவுக்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சான்றிதழ் வழங்கி கவுரவப்படுத்தினார்.
மாணவரை பள்ளி தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் பாராட்டினர்.