ADDED : செப் 04, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய பகுர்தீன் தொடக்கப்பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
மண்டபம் வட்டாரக் கல்வி அலுவலர் பாலாமணி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் முத்துமாரி வரவேற்றார்.
மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்ற மாணவி பர்ஷீனு, ராமநாதபுரம் மாவட்ட சதுரங்கக் கழகம் நடத்திய போட்டியில் முதலிடம் பெற்ற 2ம் வகுப்பு மாணவி பரிகா, விவேகானந்த கேந்திரம் நடத்திய ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டியில் வென்ற மாணவி புவிகாஸ்ரீ ஆகியோருக்கு பாராட்டு சான்று, பரிசு வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் மணிகண்டன், ராஜா, பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் காஜாமைதீன் நன்றி கூறினார்.