ADDED : ஆக 22, 2026 02:20 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுடி அருகே பீட்டர்புரம் சேர்ந்த ஆத்விக், கவி, பேரையூரை சேர்ந்த உலகேஸ்வரன், சந்துரு பேரையூர் கண்மாய் கரையில் இருந்து பஜார் பகுதிக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது அரசு பள்ளி அருகே ரோட்டில் ரூ.400 கிடந்துள்ளது. பணத்தை எடுத்த மாணவர்கள் பேரையூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசனிடம் ஒப்படைத்தனர்.
ரோட்டில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவர்கள் ஆத்விக், கவி, உலகேஸ்வரன், சந்துரு ஆகியோருக்கு சால்வை அணிவித்து போலீசார் பாராட்டினர். இச்செயலை பொதுமக்கள் பலர் பாராட்டினர்.
