ADDED : ஆக 21, 2026 06:35 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறையும், ராமநாதபுரம் சேது செம்மொழி இலக்கியப் பேரவையும் இணைந்து ‘இலக்கியங்களில் முற்போக்கு சிந்தனைகள்’ எனும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் கோபிநாத் நோக்கவுரையாற்றினார்.
முத்தமிழ் மன்றத்தலைவர் மானுடப்பிரியன், அன்னக்கிளி,சேது செம்மொழி இலக்கியப் பேரவை நிறுவனர் சுந்தரராஜன் வாழ்க்கை மேம்பட கவிஞர் கண்ணதாசன் பதிவுகள் என்ற தலைப்பில் பேசினார். முத்தமிழ் மன்றத்தலைவர் மானுடப்பிரியன், அன்னக்கிளி உள்ளிட்டோர் முற்போக்கு சிந்தனைகள் குறித்து பேசினர். தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
––
