ADDED : ஆக 21, 2026 06:35 PM
ராமநாதபுரம்: செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி பயில்வதற்கான தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இயந்திரப் பொறியியல் துறை துணைப் பேராசிரியர் தர்ம பிரபாகரன் வரவேற்றார். முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். சென்னை ஐ.ஐ.டி., இயந்திர பொறியியல் துறை பேராசிரியர் அருணாச்சலம் பேசியதாவது:
கேட், ஜெ.ஏ.எம்., தேர்வு முறை, பாடத்திட்டத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப தேர்வுக்கு தயாராக வேண்டும். கல்லுாரி காலத்தில் அதற்கான முயற்சியை துவக்கினால் ஐ.ஐ.டி., உள்ளிட்ட முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் முதுகலைப் படிப்புகளைத் தொடர முடியும்.
பின்னர் ஆராய்ச்சி மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற முடியும். முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள் மற்றும் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
