தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கல்லுாரி மாணவர்களுக்கான ஹேக்கத்தான்

கல்லுாரி மாணவர்களுக்கான ஹேக்கத்தான்

கல்லுாரி மாணவர்களுக்கான ஹேக்கத்தான்


ADDED : ஆக 21, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில் மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் ஹேக்கத்தான் துவங்கப்பட்டது. முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். டி.சி.எஸ்., நிறுவன இயக்குநர் முஹம்மது ஜியாத் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:

மாணவர்கள் தொழில் துறையின் தற்போதைய தேவைகளைப் புரிந்து கொண்டு புதுமையான சிந்தனைகளை நடைமுறைத் தொழில் நுட்பத் தீர்வுகளாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய இயக்குநர் சித்தி ஸமீம் பாத்திமா பேசியதாவது:

மாணவர்களின் புதுமையான சிந்தனைகளை ஊக்குவிப்பதற்கும், தொழில் நுட்பத் திறன்களை நடைமுறைப் பயன்பாடாக மாற்றுவதற்கும் ஹேக்கத்தான் உதவும். மாணவர்கள் அறிவையும், படைப்பாற்றலையும் பயன்படுத்தி சமூகத்திற்கும் தொழில் துறைக்கும் பயனளிக்கும் தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றார்.  பல்வேறு துறைகளைச் சேர்ந்த 21 மாணவர் குழுக்கள் ஹேக்கத்தானில் பங்கேற்று புதுமையான யோசனைகள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கினர்.

––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us