ADDED : ஆக 21, 2026 06:44 PM
ராமநாதபுரம்: வேளாண் துறை சார்பில் மண்டபம் வட்டார அட்மா திட்டத்தில், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடந்தது. வேளாண் இணை இயக்குனர் வாசுகி தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வாசுகி பேசியதாவது:
விவசாயிகள் இயற்கை வேளாண்மை முறையை பின்பற்றுவதால் மண்வளத்தை பேணிக்காத்திட முடியும். ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து வழங்குவதன் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம். விவசாயிகள் தனித்துவ பிரத்தியேக அடையாள எண் பதிவு செய்வதன் மூலம் அதிக பலன்களை பெற முடியும்.
நிகழ்வில் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) மோனிஷா, உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) கீதாஞ்சலி, பேராசிரியர் ஜெகதீசன் மற்றும் திருப்புல்லாணி, மண்டபம் வட்டார விவசாயிகள் பங்கேற்றனர். –––
