ADDED : பிப் 04, 2024 11:26 PM
திருவாடானை: திருவாடானை, தொண்டி, ஓரியூர் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வில் 488 பேர் கலந்து கொண்டனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடந்தது.
திருவாடானை, தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடந்தது.
தேர்வில் திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள், பெண்கள் பள்ளி, தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள், பெண்கள் பள்ளி, சின்னக்கீரமங்கலம், பாண்டுகுடி, மங்களக்குடி, தினைக்காத்தான்வயல், தளிர்மருங்கூர், ஓரியூர், வட்டாணம், சோழகன்பேட்டை, எஸ்.பி.பட்டினம், நம்புதாளை உட்பட 38 பள்ளிகளில் படிக்கும் 488 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், இத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கபடுகிறது என்றனர்.

