/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்; பார்வையிட ஏற்பாடு:
/
வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்; பார்வையிட ஏற்பாடு:
வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்; பார்வையிட ஏற்பாடு:
வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்; பார்வையிட ஏற்பாடு:
ADDED : ஜன 22, 2025 07:17 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆஸ்ட்ரோ அறிவியல் சங்கம் சார்பில், பட்டணம்காத்தான் அம்மா பூங்காவில் வானில் ஒரே நேர்கோட்டில் வரும் 6 சூரிய குடும்ப கோள்களை தொலை நோக்கி மூலம் இலவசமாக இன்று(ஜன.22) முதல் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
நுாறாண்களுக்கு ஒருமுறை வான்வெளியில் சூரிய குடும்ப கோள்கள் தோன்றுகின்றன. இதன்படி ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் வரும் அபூர்வ நிகழ்ச்சி சில வாரங்கள் தோன்றுகிறது. வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ், ஆகிய சூரிய குடும்ப கோள்களை நேர்கோட்டில் வெற்று கண்களால் காண முடியும்.
டி-பிளாக் ரோட்டில் உள்ள அம்மா பூங்காவில் தொலைநோக்கி உதவியுடன் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம். குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வரவேண்டும். பொதுமக்களும் மாலை 6:00 முதல் இரவு 8:00மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம் என ராமநாதபுரம் ஆஸ்ட்ரோ கிளப் மாவட்டச்செயலாளர் சொக்கநாதன் தெரிவித்துள்ளார்.