/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடனுக்கு மது கேட்டு தகராறு செய்தவர் கைது
/
கடனுக்கு மது கேட்டு தகராறு செய்தவர் கைது
ADDED : பிப் 19, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடை பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் 42. இவர் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் கடை திறந்ததும் விற்பனையாளரிடம் மது பாட்டில் கடனாக கேட்டுள்ளார்.
மேற்பார்வையாளர் முருகானந்தம், விற்பனையாளர் இளையராஜா ஆகியோர் கடனுக்கு மது தர முடியாது எனக் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மணிமாறன் கடையில் புகுந்து பீர் பாட்டிலை உடைத்து இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். முருகானந்தத்தின் அலைபேசியை பறித்துச் சென்றார். முருகானந்தம் புகாரில் மணிமாறனை ஆர்.எஸ். மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., விஷ்ணுவர்தன் கைது செய்தார்.

