ADDED : பிப் 14, 2025 07:04 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கணினி மென்பொருள் மேம்பாட்டுத்துறை சார்பில்நடந்த செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கைமுதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்துதுவக்கி வைத்து பேசினார். கணினி மென்பொருள் துறைத்தலைவர் ஜெய்கணேஷ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சாப்ட்வேர் மேம்பாடு மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டபயிற்சியாளர் தேவன் பேசுகையில், ஏ.ஜி.ஐ., மென் பொருள்களின் நுண்ணறிவுத்திறன்களை விளக்கியதோடு, மனித தலையீடு இல்லாமல் பலதரப்பட்ட பணிகளை விரைவில் முடிப்பது பற்றி தெரிவித்தார்.
கல்லுாரித் தாளாளர் செல்லத்துரை அப்துல்லாவும், செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி, அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாத்திமா சானாஸ் பரூக் வாழ்த்தினர்.ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்தனர்.