/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜன.3ல் ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
/
ஜன.3ல் ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED : டிச 23, 2025 04:23 AM
ராமேஸ்வரம்: ஆருத்ரா தரிசன விழாவுக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச., 25ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து மாணிக்கவாசகர் பல்லக்கில் எழுந்தருளி கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வருவார். பின் மகா தீபாராதனை நடக்கும்.
ஒன்பதாம் நாளான ஜன., 3ல் கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள நடராஜர் சுவாமி சன்னதி முன் மாணிக்கவாசகர் எழுந்தருளி திருவாசகம் பாடியதும் நடராஜர் சுவாமி ஆருத்ரா தரிசனத்தில் எழுந்தருளுகிறார்.
பின் நடராஜர் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்ததும் அங்கு கூடியிருக்கும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்லதுரை செய்து வருகிறார்.

