/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்
/
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்
ADDED : ஜன 05, 2025 11:53 PM

பரமக்குடி; -பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஜன.,13ல் ஆருத்ரா தரிசனம் நடக்க உள்ள நிலையில், நேற்றுமுன்தினம் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் விழா துவங்கியது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த, விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது.
இங்கு மூலவர் சுவாமி சன்னதிக்கு இடப்புறத்தில் சிவகாமசுந்தரி, நடராஜமூர்த்தி தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார்.
ஆருத்ரா தரிசன விழாவில் நேற்றுமுன்தினம் இரவு  மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டது. தினமும் மாணிக்கவாசகர் ஆடி வீதி வலம் வருவார்.
மாலை திருவெம்பாவை வாசிக்கப்பட்டு தீப ஆராதனைகள் நடக்க உள்ளது. ஜன.,12ல் இரவு  உற்ஸவர் நடராஜர் மூர்த்தி பச்சை சாத்தி புறப்பாடாகி, கோயில் மண்டபத்தில் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடக்கும். மறுநாள் அதிகாலை 3:00 மணி தொடங்கி ஹோமங்கள் நடந்து மூலவருக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடக்கிறது.
பின்னர் அலங்காரம் நிறைவடைந்து காலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசன தீபாராதனை நடக்கிறது.

