/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐ.டி.ஐ.,யில் படித்தவர்களுக்கு இணை சான்றிதழ்
/
ஐ.டி.ஐ.,யில் படித்தவர்களுக்கு இணை சான்றிதழ்
ADDED : பிப் 25, 2023 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார் அரசு ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்து, பிளஸ்-2 க்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆக., 2022ல் நடைபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வுகளாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு இணையான சான்றிதழ்கள் பெற பிப். 28 க்குள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களை www.skilltraining.gn.gov.in என்ற இணையத்தளம் அல்லது அரசு ஐ.டி.ஐ., அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.