/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல்வர் கவனத்திற்கு... தாமதமாகும் ரூ.2819 கோடி குடிநீர் திட்டம்
/
முதல்வர் கவனத்திற்கு... தாமதமாகும் ரூ.2819 கோடி குடிநீர் திட்டம்
முதல்வர் கவனத்திற்கு... தாமதமாகும் ரூ.2819 கோடி குடிநீர் திட்டம்
முதல்வர் கவனத்திற்கு... தாமதமாகும் ரூ.2819 கோடி குடிநீர் திட்டம்
UPDATED : அக் 02, 2025 10:43 PM
ADDED : அக் 02, 2025 10:42 PM

தாமதமாகும் ரூ.2819 கோடி குடிநீர் திட்டம்
ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, ராமேஸ்வரம் ஆகிய 4 நகராட்சிகள், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, முதுகுளத்துார், கமுதி, அபிராமம், மண்டபம், சாயல்குடி ஆகிய 7 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 2306 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் ஜல்-ஜீவன் திட்டத்தில் ரூ.2819 கோடியே 78 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கரூர் மாவட்டம் நஞ்சை புகளூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு வழங்கும் திட்டம் 2023ல் துவங்கி 2025 ஜன.,யில் முடிக்க திட்டமிட்டும் தற்போது வரை பணிகள் முடியவில்லை. இத்திட்டத்தை நடப்பாண்டில் முடித்து வீடுதோறும் குடிநீர் வழங்க வேண்டும்.
கிடப்பில் காவிரி- - வைகை - -குண்டாறு இணைப்பு திட்டம்
காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1960ல் துவங்கிய சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான ரூ.14 ஆயிரம் கோடியிலான காவிரி- - வைகை-- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கடந்த வேளாண் தனி பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கடலில் வீணாகும் காவிரி ஆற்று நீர், வைகை ஆற்று நீரை முழுமையாக ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் சேகரிக்க அதன் வழித்தடத்தில் உள்ள கண்மாய்கள், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும்.
கானல் நீரான கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்
சாயல்குடி அருகே குதிரைமொழியில் ரூ.2000 கோடி மதிப்பிலும், நரிப்பையூரில் ரூ.120 கோடியிலும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் துவங்க 2022ல் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு திட்டம் அப்படியே உள்ளது. விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் உப்பூர் அனல் மின்நிலையம் பணிகள் துவங்கவும் மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.