/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல்வர் கவனத்திற்கு... கிடப்பில் ராமேஸ்வரம் கடற்கரை சாலை
/
முதல்வர் கவனத்திற்கு... கிடப்பில் ராமேஸ்வரம் கடற்கரை சாலை
முதல்வர் கவனத்திற்கு... கிடப்பில் ராமேஸ்வரம் கடற்கரை சாலை
முதல்வர் கவனத்திற்கு... கிடப்பில் ராமேஸ்வரம் கடற்கரை சாலை
ADDED : அக் 02, 2025 10:43 PM

ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை சாலை கிடப்பில் உள்ளதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களின் வாகனங்கள் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டு முதல் கோயில் வரை உள்ள பிரதான சாலை வழியாக வந்து செல்ல முடியும். இதனால் விடுமுறை நாட்கள், விழா நாட்களில் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து தெற்கு கடலோரம் வழியாக தொலைபேசி நிலையம் வரை கடற்கரை சாலை அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் இந்த கடற்கரை சாலை திட்டம் குறித்து ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியது. இச்சாலை அமைத்தால் அக்னி தீர்த்ததில் நீராட வரும் பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் எளிதில் திரும்பிச் செல்ல முடியும். ஆனால் சாலை அமைக்க சர்வே, மண் பரிசோதனை உள்ளிட்ட முதல்கட்ட பணிகள் எதுவும் செய்யாமல் அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கடற்கரைச் சாலையை அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.