/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்.9ல் ஆசிரியர்களுக்கு சுகாதாரம் குறித்த பயிற்சி
/
அக்.9ல் ஆசிரியர்களுக்கு சுகாதாரம் குறித்த பயிற்சி
ADDED : அக் 02, 2025 10:58 PM
திருவாடானை; திருவாடானை வட்டார அரசு தொடக்கபள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அக்.,9ல் சுகாதாரம் குறித்த விழிப் புணர்வு நடக்க உள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் 25 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு சுகாதாரம் சார்ந்த பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தொடக்கப்பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் பிரின்ஸ்ஆரோக்கிய ராஜ் ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அக்.,9ல் ராமநாதபுரம் வட்டார வள மையத்தில் காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை சுகாதாரம் சார்ந்த பயிற்சி நடை பெறும். இதில் திரு வாடானை வட்டாரத்தில் இருந்து முகிழ்த்தகம், எம்.வி.பட்டினம், முள்ளி முனை, பண்ணவயல், பாசிபட்டினம், கொடிப்பங்கு, அரும்பூர், எம்.ஆர்.பட்டினம், என்.எம்.மங்கலம், தினையத்துார், வெள்ளையபுரம், அஞ்சு கோட்டை, காடாங்குடி, எஸ்.பி.பட்டினம், தொண்டி மேற்கு, திரு வாடானை, திருவெற்றியூர், வட்டாணம், நம்புதாளை, சோழகன்பேட்டை, பெருவாக்கோட்டை, பாண்டுகுடி, தீர்த்தாண்டதானம், மங்களக்குடி, புதுவயல் ஆகிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் உட்பட 50 பேர் கலந்து கொள்ள வேண்டும்.
பயிற்சியில் சுகா தாரத்தின் முக்கியத்துவம், தன்சுத்தம், குடிநீர் மேலாண், திடக்கழிவு, திரவக்கழிவு, பள்ளி சுகாதாரம் போன்ற பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.