ADDED : ஆக 08, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வி.ஏ.ஓ., அலுவலர் சங்கம் முதுகுளத்துார் வட்ட கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடந்தது.
முன்னாள் வட்டத் தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளா ளர் பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார்.
அப்போது 10 ஆண்டுகள் பணி முடித்த வி.ஏ.ஓ.,க்களுக்கு தேர்வு நிலை வி.ஏ.ஓ., எனவும் அதற்கான ஊதியம் வழங்க வேண்டும். 20 ஆண்டுகள் பணி முடித்த வி.ஏ.ஓ.,க்களுக்கு சிறப்பு நிலை வி.ஏ.ஓ., அலுவலர் எனவும் அதற்கான ஊதியம் வழங்கவும், வி.ஏ.ஓ., கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
வி.ஏ.ஓ., மணிமூர்த்தி நன்றி கூறினார்.