/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராணுவ அதிகாரி மண்டையை உடைத்த ஆட்டோ டிரைவர் கைது
/
ராணுவ அதிகாரி மண்டையை உடைத்த ஆட்டோ டிரைவர் கைது
ADDED : ஜன 03, 2026 07:22 AM
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே தரிசனத்திற்கு வந்த ராணுவ கர்னல் குடும்பத்தினருக்கும், ஆட்டோ டிரைவருக்கும் ஏற்பட்ட தகராறில், கர்னல் மண்டை உடைந்தது. ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நாகலாந்து ராணுவப்படை பிரிவில் கர்னலாக ஜே.பி.சிங், 55, பணிபுரிகிறார். இவர், மனைவி, குடும்பத்தினர், 16 பேருடன் வேனில் ராமேஸ்வரம் வந்து, கோவிலில் தரிசனம் செய்து விட்டு, நேற்று மாலை தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு போக்குவரத்து நெரிசல் இருந்த நிலையில், சாலை ஓரம் வேனை நிறுத்தி, கர்னல் மனைவி இறங்கிய போது, இடையூறாக ஆட்டோ வந்தது.
அப்போது, ஆட்டோ டிரைவர் முருகன் சத்தமிட்டுள்ளார். கர்னல் குடும்பத்தினருடன் முருகன் மற்றும் சில டிரைவர்களும் சேர்ந்து வாக்குவாதம் செய்ததில் அடிதடியாக மாறியது. இதில், கர்னல் மண்டை உடைந்தது.
ஆட்டோ டிரைவர்களான சேகர், 58, முருகன், 45, ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தனுஷ்கோடி எஸ்.ஐ., முருகானந்தம், கர்னலை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு பதிந்து சந்திரன், 26, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
சேகர் புகாரில், கர்னல், அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

