/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.ஐ.,க்கு 'பளார்' விட்ட ஆட்டோ டிரைவர் கைது
/
எஸ்.ஐ.,க்கு 'பளார்' விட்ட ஆட்டோ டிரைவர் கைது
ADDED : ஜூலை 16, 2025 11:46 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷன் எஸ்.ஐ., கார்த்திக், 35. இவர் கேணிக்கரை சந்திப்பு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டத்தில், வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்றன.
அப்போது, சித்தார்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்த முகமது மைதீன் மகன் சேக்தாவூத் 46, என்பவர், அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
அவர் ஆட்டோவுக்கு முன் நின்ற கார் டிரைவரிடம் தகராறு செய்தார். அங்கு வந்த எஸ்.ஐ., கார்த்திக், போக்குவரத்து நெரிசலால் ஆட்டோவை எடுக்குமாறு தெரிவித்தார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சேக்தாவூத் ஆத்திரமடைந்து கார்த்திக் எஸ்.ஐ.,யை தாக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.