/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மணல் கொள்ளையர் தாக்குதல் ஆட்டோ டிரைவர்கள் காயம்
/
மணல் கொள்ளையர் தாக்குதல் ஆட்டோ டிரைவர்கள் காயம்
ADDED : பிப் 13, 2025 02:59 AM
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஆட்டோ டிரைவர்களை தாக்கியதில் இருவர் காயமடைந்தனர்.
பரமக்குடி வைகை ஆறு தரைப்பாலம் பகுதியில் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த போலீசார் அவர்களை துரத்தினர். தரைப்பாலம் பகுதி ஆட்டோ டிரைவர்கள் ஒருவரை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர்.
சில மணி நேரம் கழித்து ஆட்டோ டிரைவர்களை, மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த டீக்கடையில் வைத்து தாக்கினர். இதன் சி.சி.டி.வி., காட்சிகள் பரவியது. இதில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் சந்திரசேகர் 32, பரமக்குடி போலீசில் புகார் அளித்தார். அவரது உறவினர் விக்னேஷ் 29, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட அருண்குமார் 22, கைது செய்யப்பட்டார்.
குமாரக்குறிச்சி சரவணன் 23, காளீஸ்வரன் 21, எமனேஸ்வரம் சஞ்சீவி 20, காமேஷ் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.