/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர் மோதிய விபத்தில் ஆட்டோவில் இருந்தவர் பலி
/
டூவீலர் மோதிய விபத்தில் ஆட்டோவில் இருந்தவர் பலி
ADDED : அக் 11, 2025 04:07 AM

பரமக்குடி: பரமக்குடி ஐ.டி.ஐ., அருகில் ஆட்டோவில் அமர்ந்திருந்தவர் டூவீலர் மோதிய விபத்தில் பலி யானார்.
காட்டுப்பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் காமேஸ்வரன் 33. வெளிநாடு சென்று வந்த நிலையில் தற்போது சிட்கோவில் பணியில் உள்ளார்.
இவர் நேற்று மதியம் ஐ.டி.ஐ., எதிரில் உள்ள ஒர்க்க்ஷாப் முன்பு பெயின்ட் வாங்குவதற்காக ஆட்டோவில் அமர்ந்திருந்தார்.
அப்போது வேந்தோணியைச் சேர்ந்த கோகுல் 19, அந்த வழியாக டூவீலரில் சென்றுள்ளார். டூவீலரில் வேகமாக ஆட்டோவில் மோதியதில் அதில் அமர்ந்திருந்த காமேஸ் வரன் பலியானார்.
காமேஸ்வரனுக்கு மனைவி மற்றும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளனர்.
கோகுல் காயங்களுடன் பரமக்குடி அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.