/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில செஸ் போட்டி ராமநாதபுரத்தில் துவங்கியது 912 மாணவர்கள் பங்கேற்பு

ADDED : அக் 12, 2025 03:21 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாநில அளவிலான செஸ் போட்டி நேற்று துவங்கியது. இதில் 912 மாணவர்கள் பங்கேற்றனர்.பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் பாரதியார் தினம், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் வட்ட, மாவட்ட அளவில் ஜூலையில் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற முதல் 3 பேர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் மாநில அளவிலான செஸ் போட்டி ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நேற்று துவங்கியது.
912 மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டி 11, 14, 17, 19 வயதுதிற்குட்பட்டோர் என நான்கு பிரிவுகளில் நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் தலா 3 பேர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர்.