/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண்கள் குளிக்கும் இடத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தம்: இடமாற்ற கோரிக்கை
/
பெண்கள் குளிக்கும் இடத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தம்: இடமாற்ற கோரிக்கை
பெண்கள் குளிக்கும் இடத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தம்: இடமாற்ற கோரிக்கை
பெண்கள் குளிக்கும் இடத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தம்: இடமாற்ற கோரிக்கை
ADDED : மே 20, 2025 11:44 PM

திருவாடானை : திருவாடானை அருகே கற்காத்தகுடியில் குளத்தின் கரையில் பெண்கள் குளிக்கும் இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவதை தடுத்து, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
கற்காத்தகுடியில் பஸ் ஸ்டாப் அருகே குளத்தின் கரையில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தபடுகிறது. அப்பகுதி பெண்கள் குளிக்கும் இடமாக இருப்பதால் ஆட்டோக்களை அப்புறபடுத்த வேண்டும் என ஊர்மக்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆண்டியிடம் மனு கொடுத்தனர்.
இது குறித்து பெண்கள் கூறியதாவது:- குளத்தின் கரையில் அமர்ந்து மது அருந்துவது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதனால் குளிக்க செல்லும் பெண்கள் முகம் சுளிக்கின்றனர்.
ஆட்டோக்களை ஒதுக்குபுறமான இடத்தில் நிறுத்த கூறியும் ஆட்டோ டிரைவர்கள் மறுக்கிறார்கள். ஆகவே திருவாடானை போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தாலுகா அலுவலகத்தில் ஆட்டோக்களை அப்புறபடுத்த வேண்டும் என மனு கொடுத்துள்ளோம் என்றனர்.