/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆட்டோ தொழிலாளர்கள் செப்.24ல் போராட்டம்
/
ஆட்டோ தொழிலாளர்கள் செப்.24ல் போராட்டம்
ADDED : செப் 20, 2024 11:51 PM
ராமநாதபுரம்:-ஆன்லைன் அபராதம், புதிய மோட்டார் வாகன சட்டம் ரத்து கோரி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு செப்.,24ல் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
ஆட்டோக்களுக்கு ஆன்லைன் அபராதம் விதிப்பதை நிறுத்திட வேண்டும்.
புதிய மோட்டார் வாகன சட்டம் 2019ஐ திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க வேண்டும்.
புதுடில்லி, மகாராஷ்டிரா அரசுகளை போல் இருசக்கர பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும்.
உயர்நீதிமன்றம் உத்தரவின்படி மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அரசின் ஆட்டோ செயலியை துவக்க தாமதம் செய்யக்கூடாது.
டோல்கேட் கட்டணங்களை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த ஆட்டோ தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.