/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில்களில் தானியங்கி மணி ஒலி : பக்தர்கள் மகிழ்ச்சி
/
கோயில்களில் தானியங்கி மணி ஒலி : பக்தர்கள் மகிழ்ச்சி
கோயில்களில் தானியங்கி மணி ஒலி : பக்தர்கள் மகிழ்ச்சி
கோயில்களில் தானியங்கி மணி ஒலி : பக்தர்கள் மகிழ்ச்சி
ADDED : செப் 07, 2025 10:58 PM
திருவாடானை : கிராமங்களில் உள்ள கோயில்களில் தானியங்கி கருவி மூலம் மணி ஒலி எழுப்பி சரியான நேரத்தில் பூஜை நடப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவாடானை தாலுகா கீழ்க்குடி கிராமத்தில் 27 கோயில்கள் உள்ளன. கோயில்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து மக்களிடம் ஆன்மிகத்தை வளர்க்கிறது.
அவர்களின் தினசரி வாழ்க்கையில், விழாக்கள், பண்டிகைகள், திருமணங்கள் என அனைத்து நிகழ்வுகளிலும் கோயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பெரும்பாலான கோயில்களில் அதிகாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஸ்லோகம் பிளேயர்கள் மூலமாக தானியங்கி மணிகள் ஒலிக்கின்றன.
இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் மணியோசையை எழுப்பி பக்தர் களுக்கு நினைவூட்டவும், கோயிலில் பூஜைகளை சரியான நேரத்தில் நடக்கிறது.