/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முக்கிய நோய்களுக்கு சித்தமருந்துகள் இருப்பு
/
முக்கிய நோய்களுக்கு சித்தமருந்துகள் இருப்பு
ADDED : பிப் 12, 2024 04:47 AM
திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனையில் உள்ள சித்தமருத்துவ பிரிவில் முக்கியமான நோய்களுக்கு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மருந்துகள் வந்துள்ளன.
திருவாடானை அரசு மருத்துவமனையில் சித்தமருத்துவ பிரிவு செயல்படுகிறது. தினமும் ஏராளமானோர் மருந்துகள் வாங்க செல்கின்றனர்.
இங்கு முடக்குவாதம் வலி போன்ற பல முக்கிய நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் இல்லை. ஆரம்பத்தில் சித்தமருத்துவ பிரிவு துவங்கபட்ட போது தேவையான மருந்துகள் இருப்பு வைக்கபட்டது.
ஆனால் நாளைடைவில் மருந்து, மாத்திரைகள் குறைந்ததால் நோயாளி களுக்கு போதுமான மருந்துகள் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.
ஆகவே அனைத்து நோய்களுக்கான மருந்து, மாத்திரைகளை வழங்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக வலி மருந்துகள் வந்து, போதுமான அளவில் இருப்புஉள்ளதால் நோயாளிகள் நிம்மதியடைந்தனர்.