/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உமையநாயகி அம்மன் கோயிலில் ஆவணி முதல் பார்வை நடைதிறப்பு
/
உமையநாயகி அம்மன் கோயிலில் ஆவணி முதல் பார்வை நடைதிறப்பு
உமையநாயகி அம்மன் கோயிலில் ஆவணி முதல் பார்வை நடைதிறப்பு
உமையநாயகி அம்மன் கோயிலில் ஆவணி முதல் பார்வை நடைதிறப்பு
ADDED : ஆக 17, 2025 11:07 PM
சாயல்குடி : -சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் உள்ள உமையநாயகி அம்மன் கோயில் ஆவணி முதல் பார்வை நடைதிறப்பு நடந்தது.
இக்கோயில் மூலவர் உமையநாயகி அம்மன் சன்னதி கூரை ஏதுமின்றி வெயிலிலும் மழையிலும் திருமேனி படும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ஆவணி தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் முதல் பார்வை நிகழ்ச்சிக்காக நடை திறக்கப்பட்டது. மூலவர் உமையநாயகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரம் நடந்தது.
பொதுவாக ஆடி மாதம் கோயில்களில் முளைப்பாரி, முளைக்கொட்டு உற்ஸவம் கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால் இங்குள்ள அம்மன் கோயிலில் உமையநாயகி அம்மன் ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடி விட்டு மீண்டும் திரும்பி வருவதாக ஐதீகம் உள்ளது.
அதனடிப்படையில் நேற்று முன்தினம் ஆடி மாதம் நிறைவடைந்ததை முன்னிட்டு ஆவணி முதல் பார்வை நிகழ்ச்சியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.