நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்:   தேவிபட்டினம் அருகே பனைக்குளம் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் கேரம் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முஸ்லிம் பரிபாலன சபை உதவி தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். செயலாளர் தவுலத் பாக்கீர் முன்னிலை வகித்தார்.
தலைமை இமாம் ஹாஜா முகைதீன், நிர்வாக சபை உதவி தலைவர் முகைதீன் அலி,  ஊராட்சி தலைவர் பவுசியா பானு பங்கேற்றனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் ஹபி ஜான், முகமது ஷஸ்வான், முகமது அப்ரித் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

