/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு விருது
/
ராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு விருது
ராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு விருது
ராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு விருது
ADDED : நவ 28, 2025 09:05 AM
ராமநாதபுரம்: தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பில் திறம்பட செயல்பட்ட ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு விருது, ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது. குழந்தை களுக்கு எதிரான வன்முறை, சுரண்டல், அத்துமீறல்களைத் தடுத்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது இதன் நோக்கம். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குழந்தைகள் பாதுகாப்பில் திறம்பட செயல்படும் அரசு குழந்தைகள் இல்லம், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், அரசு கூர்நோக்கு இல்லங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு 'குழந்தைகள் நலன் சேவை விருது' வழங்கப்படும் சமூக நலத்துறை சார்பில் கடந்த மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான விருது, பரிசுத் தொகை ரூ.1 லட்சத்தை முதல்வர் ஸ்டாலின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாருக்கு வழங்கினார்.

