/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு; 4ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
/
தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு; 4ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு; 4ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு; 4ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
ADDED : நவ 28, 2025 09:02 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு மீனவர் குடிசை வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
வங்கக்கடலில் சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் பகுதியில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. தனுஷ்கோடி கம்பிப்பாடு கடலோரத்தில் மீனவர் குடிசை வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
இந்நிலையில் இலங்கை அருகே உருவாகியுள்ள 'டிட்வா' புயலால் மேலும் தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் நிலை உள்ளது. நேற்று மாலை ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது புயல் அருகில் உருவாகி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தும் எச்சரிக்கையாகும்.