ADDED : ஆக 27, 2025 12:32 AM

முதுகுளத்துார்; முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் நாகராஜ், நிர்மல் குமாருக்கு சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.
முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலராக நாகராஜ், நிர்மல்குமார் உள்ளனர். பல்வேறு கிராமங்களில் சிறப்பு முகாம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் செய்து வருகின்றனர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரியில் சிறந்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விருது வழங்கும் விழா நடந்தது.
இதில் 2022ம் ஆண்டு திட்ட அலுவலர் நாகராஜ் 2023ம் ஆண்டு நிர்மல்குமார் விருது காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் நாகராஜ், நிர்மல்குமார், கல்லுாரி முதல்வர் மணிமாறன் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.