நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை:' கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகம் சார்பில் கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மன்னார் வளைகுடா கடலில் வாழக்கூடிய அரிய வகை உயிரினங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார். இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்து கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில் குமார் பேசினார்.
துபாய் ஈமான் கலாசார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், வனவர் ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை மாணவிகள் எழுப்பினர். அதற்கான பதில்கள் அளிக்கப்பட்டது.