/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தரக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம்
/
தரக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜன 04, 2024 01:52 AM
திருப்புல்லாணி: -திருப்புல்லாணி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் தரக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. பி.டி.ஓ., மணிவண்ணன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஐ.எஸ்.ஐ., சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட தளவாட பொருட்கள் வாங்கும் போது முறையாக கண்டறிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான பிரத்தியேகமான (ஆப்) அலைபேசி செயலி ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்த ஆப் மூலம் அனைத்து வகை உபயோகப் பொருட்களிலும் உள்ள ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் கண்டுபிடிக்கவும், ஐ.எஸ்.ஐ., தரத்தின் முத்திரை மற்றும் அதனுடன் கூடிய பதிவை பதிவிறக்கம் செய்து அது உற்பத்தி செய்யப்படும் காலம், காலாவதி, நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்த அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பொதுவாக ஊராட்சிகளில் வாங்கப்படும் பொருள்களின் தன்மை குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதற்கு தீர்வு காணவும் இவ்வகை அலைபேசி செயலி பயனுள்ளதாக இருக்கும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.