ADDED : மார் 18, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கீழப்பணையடியேந்தல் கிராமத்தில் ஊராட்சி, மகளிர் போலீசார் சார்பில், பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை திருமணம் குறித்து பல்வேறு கருத்துகளை இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எஸ்.ஐ.,சுந்தரி, பெண்கள் பங்கேற்றனர்.

