ADDED : பிப் 12, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் செல்வராஜ் உத்தரவின் பேரில் பேரூராட்சி பகுதி வீடுகளில் குப்பையை துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்க கோரி பஸ்ஸ்டாண்டில் கலை நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தெருக்களில் தினமும் வரும் துப்புரவுப் பணியாளர்களிடம் குப்பையை வழங்க வேண்டும்.
கண்ட இடங்களில் குப்பையை குவித்து வைக்க வேண்டாம். கடைகளில் சேகரமாகும் குப்பையை வாகனங்களில் மட்டும் வழங்க வேண்டும்.
குப்பை சேகரிக்கப்பட்டு உரம் தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆங்காங்கே குப்பை கொட்டப்படுவதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் பாடல்கள் பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.