/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க பள்ளியில் விழிப்புணர்வு
/
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க பள்ளியில் விழிப்புணர்வு
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க பள்ளியில் விழிப்புணர்வு
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : அக் 19, 2025 06:12 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருங்குளம் அல் கலம் சர்வதேசப் பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் அப்துல் ரஷீத் வரவேற்றார்.
ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் கோமதி அமுதா தலைமையில் தீயணைப்புத் துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
தீ விபத்து ஏற்படும் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீயை அணைக்கும் முறைகள், எரிவாயு கசிவின் போது செயல்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினர்.
மேலும் தீ விபத்தில் சிக்குபவர்களைக் காப்பாற்றுவது, காயமடைந்தவர் களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது, அதனால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்குஅறிவுறுத்தினர்.