/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்.21ல் மீனவர்கள் கரை திரும்ப அறிவுரை
/
அக்.21ல் மீனவர்கள் கரை திரும்ப அறிவுரை
ADDED : அக் 19, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி மீன்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அக்.,21 ல் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
எனவே ராமநாதபுரம் (வடக்கு) ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரை ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் அக்.,21 காலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்று கூறினர்.