ADDED : அக் 17, 2024 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வருவாய்த்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ராமநாதபுரம் மண்டலத் துணை தாசில்தார் கோகிலா தலைமை வகித்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அரண்மனையிலிருந்து துவங்கி ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் ஊர்வலம் முடிவடைந்தது.
வருவாய் ஆய்வாளர் கோபி கிருஷ்ணன், அலுவலக பணியாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், தலையாரிகள், மக்கள் பங்கேற்றனர்.