ADDED : நவ 04, 2026 03:26 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் காரேந்தல் கிராமத்தில் ‘கேத் பச்சாவ் அபியான்’ மற்றும் ‘விளைநிலம் காப்போம் இயக்கம்’ திட்டங்களின் கீழ் விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.
இதில் நம்மாழ்வார் வேளாண் கல்லுாரி மாணவி நுாதனா ஸ்ரீ, இயற்கை விவசாயத்தின் நன்மை மற்றும் இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பது குறித்து விளக்கினார்.
தொடர்ந்து இயற்கை விவசாயம் மூலம் மண் வளத்தை பாதுகாப்பது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
