ADDED : அக் 19, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடனை அரசு கலைக்கல்லுாரியில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை, ராமநாதபுரம் காவல்துறை, சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து பாலியல் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி. காந்தி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மோகனப்பிரியா ஆகியோர் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாத்தல் விழிப்புணர்வு குறித்து பேசினர். கவுரவ விரிவுரையாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

